பாத்திரம் கழுவச் சென்ற பெண்ணுக்கு நேர்ந்த கதி!

களுத்துறை கொஹொலான பிரதேசத்தில் களு கங்கைக்கு அருகில் பெண் ஒருவர் முதலையால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

களு கங்கையில் பாத்திரம் கழுவச் சென்ற பெண் ஒருவரையே முதலை இழுத்துச் சென்றுள்ளதாக களுத்துறை தெற்கு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

தொடங்கொட கொஹொலான வடக்கு பகுதியை சேர்ந்த 50 வயதுடைய பெண்ணொருவரே முதலையால் இழுத்துச் செல்லப்பட்டுள்ளார்

களுகங்கையில் படகுகள் மூலம் பிரதேச மக்கள் முன்னெடுத்த தேடுதல் நடவடிக்கையின் பின்னரே சடலம் மீட்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply