புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்கள் வழங்க தீர்மானம்- அமைச்சர் ஆனந்த விஜேபால!

புதிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்க அரசாங்கம் கொள்கை ரீதியான தீர்மானத்தை எடுத்துள்ளதாக பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

தற்போது பெரும்பாலான எம்.பி.க்கள் சொந்த வாகனங்களையே பயன்படுத்துவதாக சுட்டிக்காட்டிய அவர் மேலும் தெரிவிக்கையில்,

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு வாகனங்களை வழங்குவதற்கு தீர்மானம் எடுத்துள்ளோம்.

ஆனால் அவர்களுக்கு எப்போது வாகனங்கள் வழங்கப்படும் என்பதை நாங்கள் முடிவு செய்யவில்லை.

அவர்களுக்காக புதிய வாகனங்களை கொண்டு வரமாட்டார்கள்.

இதுகுறித்து அரசாங்கம் பின்னர் பரிசீலிக்கும்” என கூறியுள்ளார்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply