காலி கோட்டை நுழைவாயில் தற்காலிகமாக பூட்டு!

காலி கோட்டைக்கான பழைய கோட்டை நுழைவாயில் நாளை (28) முதல் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை தற்காலிகமாக மூடப்படும் என தொல்பொருள் திணைக்களத்தின் தென் மாகாண பிராந்திய அலுவலகம் அறிவித்துள்ளது.

காலி கோட்டையின் பழைய கோட்டை வாயில்களுக்கு அருகிலுள்ள தொல்பொருள் நினைவுச்சின்ன சுற்றுச்சுவரில் ஒரு பாதுகாப்பு பணி மேற்கொள்ளப்படவுள்ளது. அதற்கமைய, வாயில்களைச் சூழவுள்ள பகுதியில் இரசாயன பாதுகாப்புப் பணிகள் முன்னெடுக்கப்படுவதால் மேற்படி தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இதனை தென் மாகாண தொல்பொருள் பணிப்பாளர் வசந்தி அழககோன் தெரிவித்துள்ளார்.

நாளை தொடக்கம் 31ஆம் திகதி வரை காலி கோட்டைக்குள் நுழைவதும் வெளியேறுவதும் புதிய கோட்டை வாயில்கள் ஊடாக மேற்கொள்ளப்படும் என திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply