இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் இனிப் பேச்சுவார்த்தை இல்லை- இ.சந்திரசேகர்!

“இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் இந்திய மீனவர்களுடன் இனிப் பேச்சுவார்த்தை கிடையாது” என்று கடற்றொழில் அமைச்சர் இ.சந்திரசேகர் தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இலங்கை – இந்திய மீனவர்களின் பிரச்சினை தொடர்பில் இந்திய மீனவர்களுடன் இனிப் பேச்சுவார்த்தை கிடையாது. பேச்சுவார்த்தை எல்லாம் முடிந்துவிட்டன. யாரோடும் இனிப் பேச்சுவார்த்தை இல்லை.

மீன்பிடி அமைச்சில் உள்ள அதிகாரிகளுக்கும், இந்தியாவில் உள்ள அதிகாரிகளுக்கும் இடையில் தொழில்நுட்ப ரீதியிலான பிரச்சினைகள் தொடர்பான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. அந்தப் பேச்சுவார்த்தைகள் தொடரும்.

இதேநேரம் வேறு விதமான மனிதாபிமான உதவிகளை நாடுவதோ, கொடுப்பதோ தொடர்பில் அப்படியான ஒரு பேச்சுவார்த்தைக்கு நாங்கள் செல்லப்போவதில்லை. இதுதான் எமது மனிதாபிமான நடவடிக்கை என்று நாங்கள் கூறுகின்றோம்.” – என்றார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply