கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொண்ணொருவர் நேற்று வெள்ளிக்கிழமை (27) கொலை செய்யப்பட்டுள்ளதாக எஹெலியகொட பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இரத்தினபுரி, எஹெலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புலத்கொஹுபிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இது தொடர்பில் மேலும் தெரியவருவது, குடும்பத் தகராறு காரணமாக அந்தப் பெண்ணின் உறவினர் கூரிய ஆயுதத்தால் தாக்குதல் மேற்கொண்ட போதே உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு உயிரிழந்தவர் புலத்கொஹுபிட்டிய , எஹெலியகொட பிரதேசத்தில் வசிக்கும் 60 வயதுடைய பெண் ஆவார்.
சந்தேக நபர் பிரதேசத்தை விட்டுத் தப்பிச் சென்றுள்ள நிலையில், இது தொடர்பான மேலதிக விசாரணைகளை எஹெலியகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
