
இலங்கை தமிழரசு கட்சியின் பதில் தலைவராக சீ.வீ.கே சிவஞானம் தெரிவு செய்யப்பட்டுள்ளதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஞா.ஶ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
இன்று (28) இடம்பெற்ற செயற்குழு கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
அதேபோல், கட்சியின் அரசியல் குழுத் தலைவராக மாவை சேனாதிராஜா நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த நியமனங்கள் எதிர்வரும் செயற்குழு கூட்டம் வரை அமுலில் இருக்கும் என ஞா.ஶ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.