
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ஷவை குற்றப் புலனாய்வு திணைக்களம் (CID) அழைத்துள்ளது.
கதிர்காமத்தில் உள்ள அரசாங்கத்திற்கு சொந்தமான காணியின் உரிமை தொடர்பில் வாக்குமூலம் பதிவு செய்வதற்காக இவ்வாறு அழைத்துள்ளது.
மகிந்த ராஜபக்சவின் முன்னாள் தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியான மேஜர் நெவில் வன்னியாராச்சியிடம் நேற்று (27) இரண்டரை மணிநேர வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து இவ்வாறு யோஷித ராஜபக்சவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அதன்படி, ஜனவரி 3ஆம் திகதி குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு அவருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.