எம்பிலிப்பிட்டிய – உடுகம பிரதேசத்தில் பழங்காலப் பொருட்களை பெறும் நோக்கில் சட்டவிரோதமாக அகழ்வு நடவடிக்கைகளில் ஈடுபட்ட சந்தேகநபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
போலீசாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கல்பொருல்ல, களனி பிரதேசத்தைச் சேர்ந்த 55 வயதுடையவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோதனையிடப்பட்ட இடத்தில் இருந்து தங்க முலாம் பூசப்பட்ட 02 புத்தர் சிலைகள், நீல நிற இரத்தினங்கள் உள்ளிட்ட மேலும் சில பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எம்பிலிப்பிட்டிய பொலிஸார் முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
