மாத்தறை சிறைச்சாலை வளாகத்தில் உள்ள அரச மரம் ஒன்றின் கிளை முறிந்து விழுந்த விபத்தில் 11 கைதிகள் காயமடைந்துள்ளதுடன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நேற்று (01) இரவு 10 மணியளவில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் 11 கைதிகள் காயமடைந்துள்ள நிலையில், மாத்தறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் கைதி ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
மிதிகம துர்க்கி பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபரே இதன்போது உயிரிழந்துள்ளார்.
இந்நிலையில் ஏனைய கைதிகள் அனைவரையும் வேறு கட்டிடத்தில் பாதுகாப்பாக தங்க வைக்க சிறைச்சாலை அதிகாரிகள் ஏற்பாடு செய்துள்ளதுடன், மாத்தறை சிறைச்சாலையில் உள்ள கைதிகளில் ஒரு பகுதியினர் பாதுகாப்பாக வேறு சிறைக்கு மாற்றப்படவுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
மேலும், இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மாத்தறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
