முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஆர்.பி.சூரியப்பெரும காலமானார்!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.ஆர்.பி.சூரியப்பெரும நேற்று (02) காலமானார்.

1928 ஆம் ஆண்டு ஜூன் மாதம் 8ஆம் திகதி பிறந்த அவர் தனது 96 ஆவது வயதில் காலமானர்.

ஜே.ஆர்.பி.சூரியப்பெரும முன்னாள் பல்கலைக்கழகப் பேராசிரியரும், அரசியல் விமர்சகர் மற்றும் எழுத்தாளரும் ஆவார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைப்பாளராக நீண்ட காலம் பதவி வகித்த அவர், 2010-2015 காலப்பகுதியில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பைப் பிரதிநிதித்துவப்படுத்தி தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றம் பிரவேசித்திருந்தார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராகவும் சில காலம் பணியாற்றினார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply