சீனாவில் மீண்டும் ஒரு புது வைரஸ் பரவி பலர் பாதிக்கப்பட்டு வருவது தொடர்பான காணொளிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சீனாவில் பரவி வருவதாக கூறப்படும் வைரஸ் தொடர்பான நிலைமையை உன்னிப்பாக அவதானித்து வருவதாக இலங்கை சுகாதார அமைச்சின் தொற்றுநோய் பிரிவு இன்று (03) வெளியிட்டுள்ள அறிக்கையில் அறிவித்துள்ளது.
வைரஸ் பற்றிய தகவல்கள் கிடைத்துள்ளதை உறுதிப்படுத்திய தொற்றுநோய் பிரிவு, அதற்கான ஆய்வின் பின்னர் நிலைமையை பகுப்பாய்வு செய்து பொதுமக்களுக்கு உரிய தகவல்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
