வவுனியாவில் காணி விடுவிப்பு!

வவுனியா வடக்கு, கனகராயன்குளம் தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு சொந்தமான காணி ஒன்றை உடனடியாக விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் இன்று (04) தெரிவித்துள்ளார்.

குறித்த காணி 2009ஆம் ஆண்டுக்கு பின் பொலிசாரால் பயன்படுத்தப்பட்டு வந்திருந்த நிலையில் அதனை விடுவிக்க அப் பகுதி மக்கள் பல தடவைகள் முயன்றும் அது பயனளிக்கவிவில்லை.

இந்நிலையில் அண்மையில் நடைபெற்ற வவுனியா வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் குறித்த விடயம் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இக்குழு கூடத்தில் குறித்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டதையடுத்து வவுனியாவிற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருடனும், பிரதி பொலிஸ்மா அதிபருடனும் இவ்விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டது.

இதனையடுத்து குறித்த காணியினை உடனடியாக விடுவிக்க வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் பொலிசாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இதனால் இக் காணி உடனடியாக விடுவிக்கப்படுகிறது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply