சமூக வலைத்தளங்களில் கசிந்த மற்றுமொரு பரீட்சை வினாத்தாள்!

வட மத்திய மாகாணத்தில் 11ம் தர தவணைப் பரீட்சை தொடர்பான சிங்கள இலக்கிய வினாத்தாள், சமூக வலைத்தளங்கள் ஊடாக வெளியிடப்பட்டமை உறுதிப்படுத்தப்பட்டமையால் இன்று (06) நடைபெறவிருந்த இறுதிப் பரீட்சை பிற்போடப்பட்டுள்ளதாக வடமத்திய மாகாண முதலமைச்சர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்தார்.

வினாத்தாள் வெளியானதில் பரீட்சை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், அதற்கு பதில் மற்றுமொரு வினாத்தாள் வழங்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

அதன்படி இன்று காலை 8.00 மணியளவில் 08 வலயங்களில் உள்ள 30 பிரிவுகளைச் சேர்ந்த 600க்கும் மேற்பட்ட பாடசாலைகளில் குறித்த பரீட்சை வினாத்தாள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் அனுராதபுரம் தலைமையக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்த முறைகேடு எவ்வாறு இடம்பெற்றது என்பதை கண்டறிய நடவடிக்கை எடுத்து வருவதாகவும் வடமத்திய மாகாண முதலமைச்சர் சிறிமேவன் தர்மசேன தெரிவித்துள்ளார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply