அரச கரும மொழிகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம்!
அரச கரும மொழிகள் ஆணைக்குழுவிற்கு புதிய தலைவர் மற்றும் உறுப்பினர்கள் நியமனம் இன்று (06) ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது.
இது தொடர்பான நியமனக் கடிதங்களை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க வழங்கி வைத்தார்.
அதன்படி, அரச கரும மொழிகள் ஆணைக்குழுவின் புதிய தலைவராக நிமல் ஆர். ரணவக்க நியமிக்கப்பட்டுள்ளார்.
அரச கரும மொழிகள் திணைக்களத்தின் ஏனைய உறுப்பினர்களாக பேராசிரியர் ஆர். எம். டபிள்யூ. ராஜபக்ச, பேராசிரியர் ஜோசப் யோகராஜா மற்றும் லரீனா அப்துல் ஹக் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.