‘மக்கள் சார் அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க நாடாளுமன்றத்திலுள்ள அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்’ என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.
இன்று (07) இடம்பெற்ற புதிய வருடத்துக்கான நாடாளுமன்ற அமர்வில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
“மக்களின் இறையாண்மையைப் பாதுகாப்பதில், பிரதிநிதித்துவ ஜனநாயகத்தின் கேந்திர ஸ்தானமாக, உயரிய நாடாளுமன்றத்திற்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்பு தனித்துவமானதொன்றாகும்.
வெறும் கோஷங்களுக்கு சுருங்கிப் போகாது, புதிய அரசியல் கலாசாரத்தின் ஊடாக மக்களின் எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் நிறைவேற்றப்படும், மக்கள் சார் அரசியல் கலாச்சாரத்தை உருவாக்க நாடாளுமன்றத்திலுள்ள அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும்” என்றார்.
மேலும் அர்ப்பணிப்புடன் செயற்படக்கூடியவருடமாக அமைய வாழ்த்துகள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் இதன்போது தெரிவித்துள்ளார்.