ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 14ஆம் திகதி சீனாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.
இன்று இடம்பெற்ற, அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இதனை தெரிவித்தார்.
ஜனாதிபதியின் சீனாவுக்கான உத்தியோகப்பூர்வ விஜயத்தின் போது, அமைச்சர்களான பிமல் ரத்நாயக்க மற்றும் விஜித ஹேரத் ஆகியோரும் இந்த பயணத்தில் இணைந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
14ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை, மூன்று நாள் இந்த உத்தியோகப்பூர்வ விஜயம் மேற்கொள்ளப்படவுள்ளது.