தூய்மையான இலங்கை (Clean Sri Lanka) வேலைத்திட்டம் தொடர்பில் மக்களுக்கு விளக்கமளிக்கும் வகையில் இரண்டு நாட்கள் பாராளுமன்ற விவாதம் நடாத்த தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி ஜனவரி 21 மற்றும் 22 ஆகிய திகதிகளில் மேற்படி விவாதம் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
