இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சி ஜனாதிபதி தலைமையில் ஆரம்பம்!

சீனங்கோட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கம் (CGJTA) ஆண்டுதோறும் ஏற்பாடு செய்து வரும் “Gem Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரணக் கண்காட்சி ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் இன்று (08) காலை சினமன் பெந்தொட்ட பீச் ஹோட்டலில் வெகு விமர்சையாக ஆரம்பமானது.

இந்நிகழ்வில் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகார சபையின் தலைவர் நவீன் சூரியராச்சி, சீனங்கோட்டை இரத்தினக்கல் மற்றும் ஆபரண சங்கத்தின் (CGJTA) தலைவர் மர்ஜான் பலீல் மற்றும் தூதுவர்கள் உள்ளிட்ட பெருந்திரளானோர் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

“Gem Sri Lanka – 2025” இரத்தினக்கல் மற்றும் ஆபரண கண்காட்சியை ஆரம்பித்து வைத்த ஜனாதிபதி, கண்காட்சி கூடங்களை பார்வையிட்டதோடு இரத்தினக்கல் தொழில்துறையினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்தும் கலந்துரையாடினார்.

அதிகளவான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கொள்வனவாளர்கள் இதில் இணைந்து கொண்டமை விசேட அம்சமாகும்.

இவ்வருட “Gem Sri Lanka – 2025” கண்காட்சியானது 103 கண்காட்சிக் கூடங்களை உள்ளடக்கியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

இந்தக் கண்காட்சி ஜனவரி 10ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply