இஸ்லாம் மதத்தை அவமதித்த குற்றச்சாட்டில் பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் 09 மாத சிறைத்தண்டனை விதித்துள்ளது.
2016 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 16 ஆம் திகதியன்று கிருலப்பனையில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், “இஸ்லாம் ஒரு புற்றுநோய்.. அதை துடைத்தெறிய வேண்டும்” என்ற கருத்தினை வெளியிட்டிருந்தார்.
தேரரின் இந்த கருத்தினால், இன நல்லிணக்கத்தை மீறும் வகையில் செயற்பட்டதாகக் குற்றம்சாட்டி, தண்டனைச் சட்டத்தின் பிரிவு 291 இன் கீழ் ஞானசார தேரருக்கு எதிராக பொலிஸார் வழக்குப் பதிவு செய்திருந்தனர்.
இந்த வழக்கின் அடிப்படையிலேயே, ஞானசார தேரருக்கு ஒன்பது மாத சிறை தண்டனை விதித்த கொழும்பு நீதிமன்றத்தின் மேலதிக நீதவான் பசன் அமரசேன, பிரதிவாதிக்கு 1,500 ரூபா அபராதம் விதிக்கவும் உத்தரவிட்டார்.