அனைத்து வகையான மதுபானங்களுக்கான வரியை 6வீதமாக உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நேற்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில், இதற்கான வர்த்தமானி அறிவித்தல் நிதியமைச்சினால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, பல வகையான மதுபானங்களுக்கான வரி வெவ்வேறு கட்டங்களின் கீழ் திருத்தப்பட்டுள்ளது.
சராசரியாக மதுபான போத்தல் ஒன்றின் விலை 6 சதவீதத்தால் அதிகரிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இன்று முதல் அமுலாகும் வகையில் சிகெரெட் விலையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, 4 கட்டங்களின் கீழ் சிகெரெட்டுகளின் விலைகள் 5 ரூபா மற்றும் 10 ரூபாயினாலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
