சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்கின் (Xi Jinping) அழைப்பின் பேரில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜனவரி 14 முதல் 17 வரை சீனாவுக்கான நான்கு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
ஜனாதிபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மேற்கொள்ளும் இரண்டாவது வெளிநாட்டு உத்தியோகபூர்வ விஜயம் இது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அதன்படி இன்று இரவு நாட்டிலிருந்து சீனாவுக்கு பயணமாகிறார்.
இந்த விஜயத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, சீன ஜனாதிபதி சீ ஜின்பிங், சீன பிரதமர் லீ சங் (Li Qiang) ஆகியோரையும், மற்றும் இராஜதந்திரிகளையும் சந்திக்க உள்ளார்.
அத்தோடு தொழில்நுட்பம், விவசாயம் மற்றும் வறுமை ஒழிப்பு உள்ளிட்ட துறைசார் பல கள விஜயங்களிலும் ஜனாதிபதி பங்கேற்க உள்ளார்.
மற்றும், பல உயர் மட்ட வர்த்தகக் கூட்டங்களிலும் பங்கேற்க திட்டமிடப்பட்டுள்ளது.
இரு நாடுகளுக்குமிடையிலான உறவு வலுப்படுத்தப்படுவதற்கு இந்த பயணம் மிக முக்கியமான முன்னெடுப்பாகக் கருதப்படுவதோடு, இதன் மூலம் இருதரப்பு பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் முதலீட்டு ஒத்துழைப்பை மேம்படுத்த முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
