எரிபொருளுக்கு விதிக்கப்படும் வரியில் மாற்றம் இல்லை- வெளியாகியது வர்த்தமானி!

எரிபொருளுக்காக தற்போது விதிக்கப்பட்டுள்ள வரியில் எந்தவித திருத்தத்தையும் மேற்கொள்ளாதிருப்பதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவினால் இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் பெற்றோல் லீட்டர் ஒன்றுக்காக 72 ரூபாவும், ஓட்டோ டீசல் லீட்டர் ஒன்றுக்காக 50 ரூபாவும், சூப்பர் டீசல் லீட்டர் ஒன்றுக்காக 57 ரூபாவும் வரியாக அறவிடப்படுகின்றது.

இந்நிலையில், ஜனாதிபதி வெளியிட்ட வர்த்தமானி அறிவிப்பின்படி, குறித்த வரியை ஜனவரி 11ஆம் திகதி முதல் அமுலாகும் வரையில் தொடர்ச்சியாக மாற்றம் இன்றி பேணுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply