சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, நாரஹேன்பிட்டவில் உள்ள ‘மெஹெவர பியச’ அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள அரச மருந்தகக் கூட்டுத்தாபன அலுவலகத்திற்கு திடீர் கண்காணிப்பு விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.
இதன்போது, நிறுவனத்தின் செயற்பாடுகளை முறையாகவும், வெளிப்படையாகவும் செயல்படுத்த நிர்வாக அதிகாரியுடன் நீண்ட கலந்துரையாடல் நடாத்தப்பட்டது.
அத்துடன், மருந்து விநியோக வலையமைப்பு மற்றும் அதன் தற்போதைய செயற்பாடு, மருந்து கொள்முதல் செயல்முறை மற்றும் மருந்து விநியோகத் திட்டம் மற்றும் எதிர்காலத்தில் இந்த நடவடிக்கைகள் எவ்வாறு உருவாக்கப்பட வேண்டும் என்பது குறித்து சுகாதார அமைச்சர் நிர்வாக அதிகாரிக்கு அறிவுறுத்தல்களையும் வழங்கியிருந்தார்.
இதன்போது கருத்து தெரிவிக்கையில்,
மருந்துத் துறை இன்றைய உலகில் அதிக இலாபம் ஈட்டும் தொழிலாகவும், ஒரு மோசடியாகவும் மாறிவிட்டதை சுட்டிக்காட்டியதோடு, மருந்துத் துறையில் உள்ள பிரச்சினைகள் மற்றும் குறைபாடுகளைத் தீர்ப்பதற்கும், சரிசெய்வதற்கும் அர்ப்பணிப்புடன் செயற்படும் அனைத்து ஊழியர்களையும் ஊக்குவித்து பாதுகாப்பேன் என்றும் சுகாதார அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.
