அரசின் மீது ஆசிரியர் சங்கம் குற்றச்சாட்டு!

தேசிய மக்கள் சக்தி அரசின் மீது ஆசிரியர் சங்கம் குற்றம் சுமத்தியுள்ளது.

அரசாங்கத்தின் வரவு- செலவு திட்டத்தில் கல்விக்காக 271 பில்லியன் ரூபாயை ஒதுக்கிய போதும், பொதுப் பாதுகாப்புக்காக 614 பில்லியன் ரூபாயை ஒதுக்கியுள்ளமையானது தேசிய மக்கள் சக்தி வாக்குறுதியளித்த கல்விக் கொள்கைக்கு முரணாணது என ஆசிரியர் சங்கத்தின் செயலாளர் ஜோசப் ஸ்டாலின் குற்றம் சுமத்தியுள்ளார்.

அத்துடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 6 வீதத்தை கல்விக்காக ஒதுக்குமாறு கடந்த அரசாங்கங்களை வலியுறுத்திய தேசிய மக்கள் சக்தி, போர் இல்லாத சூழலில் பாதுகாப்புச் செலவை அதரிகரித்தது ஏன் என ஜோசப் ஸ்டாலின் கேள்வியெழுப்பினார்.

பாதுகாப்பு அமைச்சின் மூலதனச் செலவு 76 பில்லியன் ரூபாவாக இருந்தாலும், கல்விக்கான மூலதனச் செலவு 65 பில்லியன் என அவர் சுட்டிக்காட்டியதோடு, கல்விக்கு இதை விட நிதியை ஒதுக்க வேண்டும் எனவும் வெளிப்படுத்தியிருந்தார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply