அஸ்வேசும இரண்டாம் கட்டம் தொடர்பில் வௌியான தகவல்!

அஸ்வேசும இரண்டாம் கட்டத்திற்கான விண்ணப்பங்களை சமர்ப்பித்த குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்களின் மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை (21) தொடங்கும் என்று நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது.

அஸ்வேசும இரண்டாம் கட்டத்திற்காக சுமார் 800,000 விண்ணப்பங்களை நலன்புரி நன்மைகள் சபை பெற்றுள்ளது.

அதனடிப்படையில், குறித்த விண்ணப்பங்களில் இருந்து நலத்திட்ட உதவிகளைப் பெற தகுதியானவர்களைத் தேர்ந்தெடுக்கும் நோக்கில், வீடு வீடாகச் சென்று இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply