எதிர்வரும் நாட்களில் அரிசியை குறைந்த விலையில் வழங்கலாம்!

எதிர்வரும் நாட்களில் அரிசியை குறைந்த விலையில் வழங்க முடியும் என சிறு மற்றும் நடுத்தர அளவிலான நெல் ஆலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் யு.கே.சேமசிங்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அவர் இதனை தெரிவித்தார்.

இந்த ஆண்டின் பெரும்போக பருவத்திற்கான நெல் அறுவடை ஆரம்பித்துள்ள நிலையில், பெரும்போக பருவத்தில் ஒரு கிலோ நெல்லுக்கு குறைந்தபட்சம் 140 ரூபாய் உத்தரவாத விலை அறிவிக்கப்பட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்.

ஆனால், அரசாங்கம் நெல்லுக்கான உத்தரவாத விலையை இன்னும் அறிவிக்காததால், தாம் பல பிரச்சினைகளை எதிர்கொள்வதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.

அம்பாறை மாவட்டத்தின் ஹுலன்னுகே, லாஹுகல மற்றும் சென்கமுவ பகுதிகளில் நெல் அறுவடை பணிகள் ஆரம்பித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply