அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்களின் கடமைகளை மிகவும் திறமையாகவும் மற்றும் அனைத்து தரப்பினருடனும் நல்ல ஒருங்கிணைப்புடனும் பணிகளை முன்னெடுத்துச் செல்ல உதவி ஊழியர்களை நியமிக்க வேண்டிய தேவை உள்ளது.
அதனடிப்படையில், அமைச்சர்களுக்கான உதவி ஊழியர்கள் அதிகபட்சமாக 15 பேருக்கு உட்பட்டவர்களாகவும், பிரதி அமைச்சர்களுக்கான உதவியாளர்களின் எண்ணிக்கை 12 பேருக்கு மேற்படாத வகையில் காணப்பட வேண்டும் என்றும் ஜனாதிபதி செயலாளர் என்.எஸ் குமாநாயக்க அனைத்து அமைச்சுகளின் செயலாளர்களுக்கும் எழுத்துப்பூர்வமாக அறிவித்துள்ளார்.