பெண்களை தாக்கி பகலில் கொள்ளை!

பெண்களை வழிமறித்து தாக்கிவிட்டு, அவர்களின் கையடக்க தொலைபேசியை பறித்துச் சென்ற இரு இளைஞர்கள் போலீசாரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

நேற்று (23) முற்பகல் வவுனியா – ஓமந்தை A9 வீதியில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு பெண்களை தொடர்ந்து வந்த இரு இளைஞர்கள் குறித்த பெண்களை வழிமறித்து தாக்கியதுடன், அவர்களிடம் இருந்த ரூபா 7 இலட்சம் பெறுமதியான கையடக்க தொலைபேசியை பறிமுதல் செய்துள்ளனர்.

இது தொடர்பில் குறித்த பெண்கள் உடனடியாக வன்னி பிராந்திய பிரதி பொலிஸ்மா அதிபரின் அவசர இலக்கமான 107 இற்கு தொடர்பு கொண்டு முறையிட்டனர்.

இதனையடுத்து விரைந்து செயல்பட்ட ஓமந்தை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயத்திலக்க அவர்களின் தலைமையிலான பொலிஸ் குழுவினர் குறித்த இளைஞர்களை அடையாளம் கண்டு ஓமந்தை சேமமடு பகுதியில் துரத்திப் பிடித்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட இரு இளைஞர்களும் கிளிநொச்சி பகுதியை சேர்ந்த 29 வயதுடையவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளின் பின்னர் கைது செய்தவர்களை நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்தனர்.

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply