முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பச்சை மிளகாய் விலை அதிகரித்துள்ளது.
நாரஹேன்பிட்டி பொருளாதார மத்திய நிலையத்தில் பச்சை மிளகாயின் மொத்த விலை ரூ. 1,780 ஆக உயர்ந்துள்ளதுடன், உள்ளூர் சந்தைகளில் விலை ரூ. 1,800 ஐ எட்டியுள்ளது.
விலைகளில் ஏற்பட்ட திடீர் உயர்வு, அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரித்து வருவதால் விலையைச் சமாளிக்க முடியாமல் நுகர்வோர் சிரமத்தை எதிர்கொண்டுள்ளனர்.
பாதகமான வானிலை, அறுவடை குறைவு மற்றும் போக்குவரத்து செலவுகள் அதிகரிப்பதே விலை உயர்வுக்குக் காரணம் என்று வர்த்தகர்கள் கூறுகின்றனர்.