முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்ச கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.
யோஷித ராஜபக்ச, 2006 ஆம் ஆண்டு 5 ஆம் இலக்க பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் குற்றங்களைச் செய்ததற்கான போதுமான ஆதாரங்கள் இருப்பதாக சட்டமா அதிபர் தெரிவித்ததை அடுத்து இன்று (25) காலை பெலியத்த பகுதியில் வைத்து குற்றப் புலனாய்வுத் துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
யோஷித ராஜபக்ச தொடர்பாக குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின்படி மேலும் நடவடிக்கை எடுப்பதற்காக இந்தக் கைது மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.