கொழும்பு துறைமுகத்தில் கொள்கலன்கள் தேங்கி நிற்பதாக கொள்கலன் போக்குவரத்து வாகன உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
கொள்கலன் நெரிசல் தீர்க்கப்படும் என்று சுங்க அதிகாரிகள் கூறிய போதிலும், கடந்த சில நாட்களுடன் ஒப்பிடும்போது துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக சங்கத்தின் தலைவர் சனத் மஞ்சுள தெரிவித்தார்.
குறித்த கொள்கலன்களை உடனடியாக விடுவிப்பதற்கும், அதிகாரிகள் பணியில் இருப்பதை உறுதி செய்வதற்கும் சரியான மேற்பார்வை இல்லை என்றும் அவர் குற்றம் சாட்டினார்.