யோஷித ராஜபக்ஷ, சற்று முன்பு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டிருந்த நிலையில், நீண்ட சமர்ப்பணங்களுக்கு பின்னர் பிணையில் செல்ல அனுமதித்து கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க உத்தரவிட்டுள்ளார்.
யோஷித ராஜபக்ஷவை விளக்கமறியலில் வைக்க போதுமான மற்றும் திருப்திகரமான ஆதாரங்களை அரசு தரப்பு சமர்ப்பிக்கத் தவறியதால், பிணைச் சட்டத்தின் விதிகளின்படி பிணையில் விடுவிக்க நீதிபதி உத்தரவிட்டார்.
அதன்படி 500 மில்லியன் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணைகளில் விடுவிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.
மேலும் யோஷித ராஜபக்ஷவுக்கு வெளிநாடு செல்வதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளதோடு, இது குறித்து குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளருக்கு அறிவிக்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.
அத்துடன் யோஷித ராஜபக்ஷவை, ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமை பொலிஸ் நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் ஆஜராகுமாறு உத்தரவிட்ட நீதவான், சாட்சிகளுக்கு அழுத்தம் செலுத்துவதைத் தவிர்க்குமாறும் உத்தரவிட்டார்.