அண்மையில் ஏற்பட்ட பருவமழை காரணமாக உள்ளூர் உப்பு உற்பத்தியாளர்கள் எதிர்கொண்ட சவால்களைத் தொடர்ந்து, இந்தியாவிலிருந்து உப்பை இறக்குமதி செய்ய அரசாங்கம் முடிவு செய்திருந்தது.
அதனடிப்படையில், இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,485 மெட்ரிக் தொன் அடங்கிய முதலாவது உப்புத் தொகை இன்று (27) நாட்டுக்கு கொண்டுவரப்பட்டுள்ளது.
மேலும், எதிர்வரும் பெப்ரவரி மாதம் 28ஆம் திகதி வரை இந்தியாவில் இருந்து உப்பு இறக்குமதி செய்ய திட்டமிட்டுள்ளதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.