நிலவும் சிவப்பரிசி பற்றாக்குறை- சிவப்பரிசியில் பச்சை அரிசியைக் கலந்து விற்பனை செய்யும் மோசடி!

சந்தையில் ஏற்பட்டுள்ள சிவப்பரிசி பற்றாக்குறை காரணமாக சில வர்த்தகர்கள், சிவப்பரிசியில் பச்சை அரிசியைக் கலந்து விற்பனை செய்யும் மோசடி இடம்பெறுவதாக நுகர்வோர் விவகார அதிகாரசபைக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதன்படி, இது தொடர்பாக சோதனைகளை நடாத்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகாரசபையின் தகவல் பணிப்பாளர் அசேல பண்டார தெரிவித்தார்.

இதற்கிடையில், அரிசியின் கட்டுப்பாட்டு விலையை விட அதிக விலைக்கு விற்பனை செய்வது தொடர்பில், நுகர்வோர் விவகார அதிகாரசபையால் பல சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்பட்டு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply