வர்த்தக கடைகளில் பதுக்கி வைக்கப்படும் அரிசி- பொதுமக்கள் புகார்!

பாலமுனை பிரதேசத்தின் ஒரு சில வர்த்தக கடைகளில் அரிசி கட்டுப்பாட்டு விலைகளை மீறி விற்கபடுவதாகவும், அரிசி வாங்க வரும் பொதுமக்களிடம் அரிசி இல்லை என்று விற்பனையாளர்கள் கூறி வருவதாகவும் பொதுமக்கள் புகார் தெரிவிக்கின்றனர்.

கூடுதல் விலைக்கு அரிசியினை விற்று இலாபம் தேடும் முயற்சியில் ஈடுபடும் வர்த்தக முகவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மக்கள் சுட்டிக் காட்டுகின்றனர்.

குறித்த விடயம் தொடர்பில், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கள விஜயம் மேற்கொண்டு பொதுமக்களுக்கு அன்றாடம் தேவையான அத்தியாவசிய பொருளான அரிசியினை பெற்றுக் கொடுக்க முன் வர வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply