இலங்கையில் ஆண்களை விட பெண்கள் புகைப்பிடிக்கும் வீதம் அதிகரித்துள்ளதாக விசேட வைத்தியர் சமன் இத்தகொட வெளிப்படுத்தியுள்ளார்.
இதன் காரணமாக, பெண்களுக்கு முதல் நிலை நுரையீரல் புற்றுநோய், ஐந்தாம் நிலை வரை உருவாகும் அபாயம் உள்ளதாக, குறிப்பாக இளம் பெண்கள் நுரையீரல் புற்றுநோய்க்கு ஆளாகும் வாய்ப்பு அதிகமாக உள்ளதாக வைத்தியர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுமார் 10-15 ஆண்டுகளுக்கு முன்னர் இலங்கையில் புகைப்பிடித்த வீதம் மற்றும் புகைப்பிடிப்பவர்களின் கணக்கெடுப்பு அறிக்கைகளை தற்போது ஒப்பிட்டு பார்க்கும் போது, தற்போது குறைவடைந்திருந்தாலும் கூட கணக்கெடுப்புகளின்படி பெண்கள் புகைப்பிடிக்கும் வீதமானது அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது.