மனைவியின் தகாத உறவால் நேர்ந்த துயரம்!

மாதம்பே பழைய நகரப் பகுதியில் நபரொருவர் கூரிய ஆயுதத்தால் குத்தி கொலை செய்யப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவது,

வீட்டொன்றில் ஆண் ஒருவரும், பெண் ஒருவரும் வெட்டுக்காயங்களுடன் கிடப்பதாக மாதம்பே பொலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்ததையடுத்து, சம்பவ இடத்துக்கு உடனடியாக விரைந்த பொலிஸார் இருவரையும் சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த ஆண் உயிரிழந்துள்ளார்.

மாதம்பே பகுதியில் வசித்து வந்த 60 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இது தொடர்பில் பொலிசார் மேற்கொண்ட விசாரணையின் போது, காயமடைந்த பெண்ணின் கணவரே இக் கொலையை செய்ததாகவும், மனைவியின் தகாத உறவே அதற்குக் காரணம் என்றும் தெரிய வந்துள்ளது.

கொலையைச் செய்த சந்தேக நபர் நேற்று இரவு மாதம்பே பொலிஸ் பிரிவின் பட்டியகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டதுடன், குறித்த நபர் பட்டியகம பகுதியைச் சேர்ந்த 45 வயதுடையவர் எனவும் தெரியவந்துள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மாதம்பே பொலிஸார் முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply