எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சி பிரதிநிதிகளிடையே கலந்துரையாடல்!

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில், எதிர்க்கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்களுடன் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

இந்த சந்திப்பில், அனுராத ஜயரத்ன, சாணக்கியன் இராசமாணிக்கம், மனோ கணேசன், பழனி திகாம்பரம், கயந்த கருணாதிலக, ஜே.சி. அலவத்துவல, அஜித் பி. பெரேரா, ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

சஜித் பிரேமதாச இங்கு கருத்து தெரிவிக்கையில், நாடாளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் குரலை மேலும் மேலோங்கச் செய்து, எதிர்க்கட்சியை உருவாக்கி, மக்களின் பிரச்சினைகளை அரசாங்கத்தின் கவனத்திற்கு கொண்டு வரும் வகையில் அனைவரையும் ஒன்று திரட்டுமாறு எதிர்க்கட்சியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சக கட்சித் தலைவர்களை கேட்டுக் கொண்டார்.

இவ்வாறு செய்வதன் மூலம், பலமான நாடாளுமன்றத்தை உருவாக்க முடியும் என்றும், அரசாங்கத்தின் சிறந்த விடயங்களுக்கு ஆதரவளிப்பது போலவே நாட்டுக்கும் மக்களுக்கும் பாதகம் விளைவிக்கும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மக்கள் பக்கம் நாம் முன்நிற்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இங்கு மேலும் சுட்டிக்காட்டினார்.

 

 

 

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply