புற்றுநோய் சிகிச்சைக்கு தேவையான 7 மருந்துகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக, இலங்கை புற்றுநோயியல் நிபுணர்கள் கல்லூரியின் பதிவாளர், இரத்த புற்றுநோய் நிபுணரான வைத்தியர் புத்திக சோமவர்தன தெரிவித்துள்ளார்.
இரண்டு வகையான வாய் மருந்துகளுக்கும், ஐந்து வகையான தடுப்பூசிகளுக்கும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிவித்த வைத்தியர் புத்திக சோமவர்தன, இலங்கையில் புற்றுநோய் சிகிச்சைக்கு 28 வாய்வழி மருந்துகளும் 33 ஊசி மருந்துகளும் இன்றியமையாதவை என்றும் கூறுகிறார்.
இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில்,
மருந்துப் பதிவு, விநியோகம் மற்றும் இறக்குமதி நடவடிக்கைகளில் ஏற்பட்டுள்ள பல சிக்கல்கள்களினால் இந்தப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாகவும், தேசிய மருந்து ஒழுங்குமுறை ஆணையமும், மாநில மருந்து ஒழுங்குமுறைக் கழகமும் இணைந்து உரிய மருந்துகளை விரைவில் கொள்முதல் செய்து வருவதாகவும் அவர் தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.