இலங்கையின் 77ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் சுதந்திர சதுக்கத்தில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
செலவுகளை கட்டுப்படுத்தி நாட்டின் கௌரவத்தை மேலோங்க செய்யும் வகையில் சுதந்திர தினநிகழ்வை நடாத்த எதிர்பார்த்துள்ளதாக பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் ஏ.எச்.எம்.எச். அபயரத்ன தெரிவித்தார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் இன்று (30) காலை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனை தெரிவித்தார்.
ஊடக சந்திப்பில் பங்கேற்ற பாதுகாப்பு செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் எச்.எஸ். துய்யகொந்த குறிப்பிடுகையில்,
இந்த ஆண்டு இராணுவ அணிவகுப்புக்கு கடந்த வருடத்தை விட 1,511 இராணுவ உறுப்பினர்களினால் குறைக்கப்பட்டு, 1873 உறுப்பினர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு கடந்த முறை பயன்படுத்தப்பட்ட 19 விமானங்களில், இந்த முறை 3 விமானங்கள் மட்டுமே பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சுதந்திர தின கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, இலங்கை கடற்படையால் 25 துப்பாக்கி சூடு மரியாதை செலுத்தும் நிகழ்வு இடம்பெறவுள்ளதாக தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர், முப்படைகளின் கவச வாகனங்கள் சுதந்திர தின கொண்டாட்டங்களுக்கு இம்முறை பயன்படுத்தப்படாது என்றும் தெரிவித்தார்.