பிரியந்த மாயாதுன்னே சி.ஐ.டி ஆல் கைது- வெளியானது காரணம்!

பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த மாயாதுன்னே இன்று (30) குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில் கைதுக்கான காரணம் குறித்து தகவல் வௌியாகியுள்ளது.

குருநாகலில் சர்வதேச கூட்டுறவு தினத்தைக் கொண்டாடுவதற்காக 2011 ஆம் ஆண்டு நடைபெற்ற ‘இசுரு சவிய’ கொண்டாட்டத்திற்காக, கூட்டுறவு நிதியிலிருந்து 183 மில்லியன் ரூபா செலவிட்டதற்காக குற்றப் புலனாய்வு பிரிவினரால் அவர் மீது விசாரணை மேற்கொள்ளப்பட்டிருந்தது.

சட்டமா அதிபரிடம் விசாரணை அறிக்கையை அனுப்பிய பின்னர், பிரியந்த மாயாதுன்னேக்கு எதிராக குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய போதுமான ஆதாரங்கள் கண்டறியப்பட்டுள்ளதாக, சட்டமா அதிபர் குற்றப் புலனாய்வுத் துறைக்கு அறிவித்ததாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக்க மனதுங்க தெரிவித்தார்.

அதற்கமைய, பொது நிர்வாக அமைச்சின் முன்னாள் செயலாளர் பிரியந்த குமார மாயாதுன்னே குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டதுடன், சந்தேக நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.

இது குறித்த மேலதிக விசாரணைகளை குற்றப் புலனாய்வு பிரிவு முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply