நுவரெலியா பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட ஹைபோரஸ்ட் பிரிவுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை காரணமாக, 6 குடும்பங்களைச் சேர்ந்த 36 பேர் ஹைபோரஸ்ட் பாடசாலையில் இன்று தற்காலிகமாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இவர்களுக்குத் தேவையான உணவை தேசிய அனர்த்த நிவாரண சேவைகள் நிலையத்தின் மூலம் வழங்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக நுவரெலியா மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவு தெரிவித்துள்ளது.