தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் என்.பி.எம். ரணதுங்க தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவராக என்.பி.எம். ரணதுங்க நியமிக்கப்பட்டிருந்த நிலையில், 3 மாதங்கள் மட்டுமே பணியாற்றி வந்த நிலையில் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
தனது ராஜினாமாவுக்கான காரணங்களை விளக்கி ஒரு நீண்ட கடிதத்தை எழுதி, ராஜினாமா கடிதம் விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாக அவரது அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.
இதற்கிடையில், இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ரமால் சிறிவர்தன மற்றும் தேசிய தொலைக்காட்சியின் தலைவராக நியமிக்கப்பட்ட கலாநிதி செனேஷ் திசாநாயக்க பண்டாரவும் சமீபத்தில் பதவி விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
தற்போதைய அரசாட்சியில் இதுவரையில் 3 பேர் பதவி விலகியுள்ளமை குறிப்பிடத்தக்கது.