40வது திருமணமான உலக அழகிப் போட்டி அமெரிக்காவின் லாஸ் வேகாஸில் நடைபெற்றிருந்தது.
இந்த போட்டியில் இலங்கையைச் சேர்ந்த இஷாதி அமந்தா இரண்டாம் இடத்தைப் பிடித்துள்ளார்.
கொழும்பில் கடந்த மாதம் நடைபெற்ற திருமணமான இலங்கை அழகிப் போட்டியில் இஷாதி அமந்தா முடிசூடியதை அடுத்து, திருமணமான உலக அழகிப் போட்டியில் இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு அவருக்குக் கிடைக்கப்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.
திருமணமான உலக அழகி போட்டியில் தென்னாப்பிரிக்காவை சேர்ந்த Tshego Gaelae கீரிடத்தை வென்றதுடன், தாய்லாந்தைச் சேர்ந்த Ploy Panperm மூன்றாவது இடத்தை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.