யாழ். ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் எம்.பி அர்ச்சுனா முன்வைத்த குற்றச்சாட்டு!

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் யாழ். மாவட்ட செயலகத்தில் இன்று நடைபெற்று வருகின்ற யாழ்ப்பாணம் மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா குற்றச்சாடை முன்வைத்துள்ளார்.

அதாவது,

2015 ஆம் ஆண்டு இருந்த அந்த காலத்து அரசாங்கத்தில் வாரிய சான்றிதழ் (Board Certificate) இல்லாமல் கபினட் அப்ரூவல் ஒன்றை எடுத்துக்கொண்டு வைத்தியர் ஒருவருக்கு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நியமனம் ஒன்றை கொடுத்திருக்கிறார்கள்.

இது சம்பந்தமாக சுகாதார அமைச்சுக்கு எழுத்து மூலம் தெரிவித்து இருக்கிறேன் என்று கூறினார்.

170 பணியாளர்களை மூன்று வருடங்களுக்கு சம்பளம் கொடுக்காமல் பணியமர்த்தி இருக்கிறார்கள். அத்துடன் அவ்வளவு பணியாளர்களையும் இலவசமாக தொடர்ந்தும் வேலை செய்வேன் என்ற அடிப்படையில் வற்புறுத்தி கடிதம் வாங்கி இருக்கிறார். அது பற்றி கதைக்க போன சம்பத்தப்பட்ட தொழிலாளிகளை வைத்திய சாலையை விட்டு வெளியேற்றி இருக்கிறார். அது சம்பந்தமாக நான் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக கதைக்க போகும்போது என் மீதும் வழக்கு பதிவு செய்திருக்கிறார்.

வடக்கு – கிழக்கிலே வைத்தியர்கள் நியமிக்கப்படும் போது, அவர்களின் தகைமை அடிப்படையிலேயே நியமனம் வழங்கப்படும். அநேகமாக சிங்களவர்களே நியமிக்கப்படுகின்றார்கள். ஆனால் இன பாகுபாடு காட்டி சிங்கள வைத்தியர்கள் எமது வைத்தியசாலைகளில் இருந்து வெளியேற்றப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என சுட்டி காட்டிய எம்.பி அர்ச்சுனா, திலீப் என்ற சிங்கள மொழி பேசும் ஒரு நல்ல திறமையுள்ள வைத்தியர் ஒருவர் இனம் மொழி வேறுபாடு காட்டி யாழ்ப்பாண வைத்தியசாலையிலிருந்து திட்டமிட்ட ரீதியில் சம்பந்தப்பட்ட வைத்திய அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இவ்வாறு பல விடயங்களை யாழ். ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply