அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்ப் தலமையிலான புதிய நிர்வாகத்தால் 3,065 இலங்கையர்கள் நாடு கடத்தப்படவுள்ளதாக அந்நாட்டு குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE) தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியுள்ளவர்கள் தொடர்பில் அந்நாட்டு குடிவரவு மற்றும் சுங்க அமலாக்கத் துறை (ICE) சேகரித்த பட்டியலில் உலகின் பல நாடுகளைச் சேர்ந்த 1,445,549 பேர் சட்டவிரோதமாக தங்கியுள்ளமை தெரியவந்துள்ளது. அதில் 3,065 இலங்கையர்களும் அடங்குவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அமெரிக்க அரசாங்கத்தின் இந்த நடவடிக்கையை ஆதரிக்காத நாடுகளின் பட்டியல் இணைக்கப்பட்டுள்ள நிலையில், அதில் இலங்கை சேர்க்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.