ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான டிஃபென்டர் வாகனம் ஒன்று தலாவ பகுதியில் இன்று (01) அதிகாலை 1 மணியளவில் விபத்துக்குள்ளாகியுள்ளது.
யாழ்ப்பாணத்தில் நேற்று (31) நடைபெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு கொழும்புக்குத் திரும்பிய வேளையில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளதுடன், விபத்தில் நான்கு பேர் படுகாயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தலாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விபத்தில் காயமடைந்தவர்கள் தலாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர், மேலதிக சிகிச்சைக்காக அனுராதபுரம் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
காயமடைந்தவர்களில் இருவரின் நிலைமை மோசமாக உள்ளதாகவும், அவர்கள் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அனுராதபுரம் வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
காயமடைந்தவர்களின் சாரதி ஜனாதிபதி செயலகத்தைச் சேர்ந்தவர் என்றும், மற்றவர்கள் இலங்கை பொலிஸில் பணிபுரியும் ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விபத்து தொடர்பிலான மேலதிக விசாரணைகளை தலாவ பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.