முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் பயணித்த வாகனம் விபத்து!

முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கோ.கருணாகரம் பயணித்த வாகனம் திருகோணமலையில் இன்று (1) விபத்திற்குள்ளானது.

மறைந்த தமிழரசு கட்சி தலைவர் மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்காக மட்டக்களப்பிலிருந்து வந்து கொண்டிருந்த போது, திருகோணமலை உப்புவெளி வீதியில் சர்வோதயத்துக்கு முன்னால் உள்ள பாதசாரி கடவையில் பொதுமக்கள் கடப்பதற்காக வேனை நிறுத்திய வேளை, பின்னால் அதிக வேகத்தில் பயணித்த மோட்டார் சைக்கிள் வேக கட்டுபாட்டை இழந்து வேனின் மீது மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தில் மோட்டார் சைக்கிள் செலுத்துனர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை உப்புவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply