மீள ஆரம்பமாகும் 11ஆம் தர பரீட்சைகள்!

வடமத்திய மாகாணத்தில் இரத்துச் செய்யப்பட்ட 11ஆம் தர தவணைப் பரீட்சைகள் இன்று (03) முதல் மீண்டும் ஆரம்பமாவதாக மாகாணக் கல்விச் செயலாளர் சமன் குமார ஜெயலத் தெரிவித்தார்.

வினாத்தாள் கசிவு சம்பவத்தால் வடமத்திய மாகாணத்தில் உள்ள பாடசாலைகளில் 11ஆம் தர இறுதித் தவணை பரீட்சை நிறுத்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனால் சாதாரண தரப் பரீட்சைக்கு வழங்கப்படுகின்ற அதே பொலிஸ் பாதுகாப்பின் கீழ் இந்த தவணைப் பரீட்சையை நடத்த தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக வட மத்திய மாகாண கல்விச் செயலாளர் சமன் குமார ஜயலத் தெரிவித்தார்.

You May Also Like

About the Author: Digital News

Leave a Reply