
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்கள் அகற்றப்படாமை திட்டமிட்ட செயலா என ஆராய நிதி அமைச்சு குழுவொன்றை நியமித்துள்ளது.
கொழும்பு துறைமுகத்தில் தேங்கியுள்ள கொள்கலன்கள் அகற்றப்படாமை,
கொள்கலன்களை அகற்றுவதில் ஏற்பட்டுள்ள தாமதம் காரணமாக கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் போக்குவரத்தை நிறுத்துவதில் ஏற்பட்டுள்ள தாமதம்,
இறக்குமதி செய்யப்பட்ட 323 கொள்கலன்களை சுங்க சோதனைக்கு உட்படுத்தாமல் அனுமதித்தமை தொடர்பில் ஏற்பட்டுள்ள சர்ச்சை முதலானவற்றை ஆராய இக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
இந்த குழுவில் கருவூல துணைச் செயலர் ஏ. கே. செனவிரத்ன தலைமையில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகத்தின் கூடுதல் செயலாளர் இ.எம்.எஸ்.பி. ஜயசுந்தர, வர்த்தக மற்றும் முதலீட்டு கொள்கை திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.கே.பி. குமார, முகாமைத்துவ கணக்காய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஏ.பி குரும்பலாபிட்டிய மற்றும் சிரேஷ்ட சுங்க பணிப்பாளர் சபுமல் ஜயசுந்தர ஆகியோர் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.